28 Oct 2012

இறைவனை எங்கே காணலாம்!


இறைவனை எங்கே காணலாம்!



உலகத்தின்படைப்பும் அதன்இயக்க மும்மனிதனின்கற்பனைக்கப்பால் ஏதோ ஒருசக்தியில் இயங்கிக்க்கொண்டிருக்கிறது இதைமறுக்கமுடியாது.


இது இறைவனின்  சக்தி என்றும். இறைவன் இல்லை என்றும் பல கருத்துக்களுடன் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இறைவனை வெவ்வேறு வழிகளில்  வெவ்வேறு நாமங்களில் வழிபடுகின்றோம்.இறைவனை பல்வேறு வழிகளில்  தேடுகின்றோம் ஆனால்  இறைவனை நாம் எம் உள்ளேயே காணலாம்.
ஒவ்வொரு சமயமும் இறைவனை அடையும் வழிகளை மிகவும் தெளிவாக சொல்கின்றது.
இறைவனைக்காண்பதற்கான அடிப்படையே அன்புதான் அன்பை அடிப்படையாகவைத்துதான் அனைத்து நல்லகாரியங்களும் மனிதநேயமாக காட்டப்படுகிறது. இந்து சமயம் அன்பே சிவம் அதுவே நலம் என அன்பையே அடிப்படையாக சொல்கிறது.
ஒருவன் அன்பும் கருணையுமுள்ளவனாக இருந்தால் அவனால் முரண்பாடற்ற அமைதியான சஞ்சலமற்ற மன அமைதியான வாழ்வை மிகவும் இன்பகரமாக  இந்த உலகில் வாழ முடியும். இறைவனை அவரால் அவர்  உள்ளேயே நிச்சயமாக உணரலாம்.

நாங்கள் யாருக்கும் மனதார எந்தத் தீங்கும் நினைக்காமல் ஏனையவர்களைப்பார்த்து பொறாமப்படாதவர்களாக இருப்பதோடு  மற்றவர்களிடம் இருந்து எப்பயனையும் எதிர்பார்க்காதவர்களாக எம்மால் முடிந்தளவுக்கு உதவி செய்வதோடு அந்த உதவியால் அவர்கள் மகிழ்வதைப்பார்த்து நாங்களும் அக மகிழக்சூடிய நல்ல மனநிலையை எம்முள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறரிடம் இருந்து பலனை எதிர்பாராமல்  மற்றவர்களை நாங்கள் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கையுடன் முயற்சிசெய்து எம் வாழ்க்ககைய்யணத்தில் பயணிக்க வேண்டும். அப்போது   பல சம்பவங்களை நாங்கள் அனுபவித்திருக்கலாம்.
உதாரணமாக அவற்றைப்பார்ப்போம்....
 எம்மோடு  பழகியவர்கள்  நண்பர்கள் சக பணியாளர்கள் உறவினர்கள் எம்மிடம்  உதவிபெற்றவர்கள் தற்போதும் அந்த உதவியால் நல்நிலைமையில்  வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாராவது  உங்களையோபார்த்து பொறாமைப்பட்டாலோ உங்களுக்கு ஏதொ வழியில் தீங்கு நினைத்தாலோ உங்களுக்கு அவர்கள் தீங்கு செய்ய முயற்சிக்கின்றார்கள் என்பதை அறிந்தாலோ நீங்கள் சிறிதும் அவர்கள் மீது கோபப்படாமல் அவர்களுக்கு நீங்கள் எந்த வழியிலும் தீங்கு நினைக்காமல்  உங்கள் விழியில் வழமைபோன்று  பயணியுங்கள்.

அப்போது உங்களுக்கு தீங்கு செய்ய நினைத்தவர்கள் உங்கள் மீது பொறாமைப்பட்டவர்கள் அதை நீங்கள் அறிந்து விட்டீர்கள் என்பதை அறிந்து வெட்கித்தலை குனிந்து நிற்பதை நீங்கள் மிகவிரைவிலேயே உணர்வீர்கள். அத்தோடு அதை நினைத்து அவர்கள் மிகவும் அதிகமாக வருத்தப்படுவதையும் உங்களால் உணரமுடியும்.
அப்போது இப்படியான சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்கள் உள்ளேயே இறைவனை காணலாம் உணர்வீர்கள். இவ்வாறு நாங்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்தால் நிச்சயம் இறைவனைக்காணலாம்.

என்னுள் நான் உணர்ந்த சிறு  அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். உங்களின் அனுபவத்தையும் எதிர்பார்க்கின்றேன்.
-நன்றி-
பு.கேதீஸ் 



No comments:

Post a Comment