26 May 2013

இவ்யுகத்தின் சிம்மக்குரல் ஒன்று ஓய்ந்து விட்டது!

இவ்யுகத்தின் சிம்மக்குரல் ஒன்று ஓய்ந்து விட்டது!

பல தலைமுறைகளை  கடந்து  ஐந்து தசாப்தத்திற்கும் மேலாக எல்லோரையும் இசையின்  பக்கம் வசமாக்கிய  இசையரசர் பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர்   டி.எம். சௌந்தரராஜன்
அவர்களின்  இழப்பு உண்மையில் அனைவரையும் ஏதொ ஒரு வகையில் பாதித்துள்ளது என்றே சொல்லலாம்.



இருதய நோய்பட்டிருந்த  இசையரசர் கடந்தவாரம்   மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வீடு திருப்பிய இருந்த நிலையில் நேற்று  மதியம் (25.05.2013) மரணமடைந்தார்.



1923 ஆம் ஆண்டு மீனாட்சி ஐங்கரரின் இரண்டாவது மகனாக பிறந்த  டி.எம். சொளந்தரராஜன்   1950ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி  என்ற பாடல் மூலமாக  தமிழ் திரைப்பட  வாழ்வில் பின்னணிப் பாடகராக தன் பயணத்தை ஆரம்பித்தார்.

 இவரின் கனிரென்ற  சிம்மக்குரலில்  தமிழில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியதோடு ஏனைய மொழிகளிலும் பல பாடல்களை பாடியிருந்தார்.



தலைமுறைகளைக்  கடந்து இக்காலத்தில்  இசையையை இரசிக்கக்கூடிய குழந்தையும்  இவரின் பாடலில்  லயத்துப்போகும் அளவுக்கு   அனைவரையும் கவர்ந்த காலத்தால் அழியாத பல இவரின்  பாடல்கள்  உலகம் இருக்கும்வரை அவரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் எனள்றால் மிகையல்ல

ஈழத்து கலைஞர்களுடன் நட்புடன் பழகிய இசையரசரின் பாடல்கள்  சமூகத்தின் பல  துறைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளது. அது அரசியல் ,ஆன்மீகம்,  போராட்டம்.   காதல்,   வாழ்க்கை தத்துவம்  என இவ்வாறு  பல தரப்பட்ட விடயங்களில் இவரின் தனிச்சிறப்பு மிக்க பாடல்கள் ஏதோவொரு வகையில் செல்வாக்கு செலுத்தியுள்ளது என கூறலாம்.

திரைப்படத்துறையில்  பாடல்களுக்கும் நடிகர்களுக்குமென  தனி இடத்தை முத்திரையை பதித்த பெருமை இவரையும் சாரும் அதிலும் டி.எம்.எஸ்.சின் பங்கு முக்கியமானது.



சிவாஜி  எம்.ஜி.ஆர். போன்ற பெருநடிகர்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க டி.எம்.எஸ்.சின் குரலும் முக்கியக் காரணம் என்றால் அது மிகையாகாது. திரையில் தோன்றும் நடிகர்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல்  அதனை உணர்வு பூர்வமாக  உணர்ந்து  நடிப்புக்கு உயிர் கொடுப்பதாய் பாடும்   மிகத்திறமைகொண்டவர் இவரே. 



   இவரின் பாடல்களை கேட்கும்போதே நாங்கள் புரிந்து கொள்ளமுடியும் இது   எம்.ஜி.ஆர் அவர்களா அல்லது சிவாஜி அவர்களா  என்று. அவ்வாறு ஒவ்வொரு நடிகருக்கேற்றால்போல்   குரலை இலாபகமாக பாடக்கூடியவர்.


 பல கொள்கைப் பாடல்களை ஜனரஞ்சகமாக்கியது இவரது தேனினும் இனிய குரல் தான். எம்.ஜி.யாருக்கு இவர் மீது தனி பிரியமே உண்டு.





இவ்வாறு இந்த யுகத்தின்  பாடகர்களில் தனி இடத்தை தனக்கென கொண்டுள்ள சிம்மக்குரலோன். இசை இளவரசர் என இன்னும் பல பெயர்களுக்கு தகுதியான டி.எம் சௌந்தரராஜன் அவர்களின் இழப்பு எல்லோருக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.







1 comment:

  1. அந்த மாபெரும் கலைஞனுக்கான உங்கள் அஞ்சலி வார்த்தைகளின் துயரத்தில் நானும் பங்கு கொள்ளுகின்றேன். நன்றி.

    ReplyDelete