10 Jun 2015

மோட்டார் சைக்கிளில் பறக்கிறவர்களுக்காக வருகிறது புதிய சட்டம்!



போக்குவரத்து இன்று எவ்வளவோ இலகுபடுத்தப்ட்டுள்ளது. எத்தனை வகையான வாகனங்களை  நாம் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றோம்.   எந்த வசதிகளையும்  நாம் பயன்படுத்தும்
முறைகளிலேயே  அது எமக்கு பாதகமா சாதகமா என்பதை  முடிவு செய்கிறது.

 உண்மையில் மோட்டார்சைக்கிள்  பாவனை எமது போக்குவரத்துத்  தேவையை இலகுபடுத்தும் மிக முக்கிய வாகனமாகும்.  ஆனால்   வீதி ஒழுங்குவிதிகளை மீறி  மோட்டார் சைக்கிளைப் செலுத்துவதால்  நாங்கள் நாளுக்கு நாள் அதிக விபத்துகளைச்சந்திக்கின்றோம்.

அண்மைய   ஆய்வுகளின்படி மோட்டார்சைக்கிள் மூலமாகவே அதிக விபத்துக்களும் உயிரிழப்புக்களும்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம்  முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 254 பேர் உயிரிழந்ததுடன் இந்த வருடம் அந்த எண்ணிக்கை 352 ஆக அதிகரித்துள்ளது.

 வீதி ஒழுங்கு விதிகளை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்துவதால் சைக்கிளைச் செலுத்துவோர்  விபத்துக்குள்ளாவதுடன், வீதி  ஒழுங்கு விதிகளை கடைப்பிடித்து பயணிப்பவர்களும்   விபத்துக்களில் சிக்கி  உயிரிழக்கும்   நிலைமையும்  அதிகம் காணப்படுகின்றன.

தற்போது புதிதாக அறிமுகமாகவுள்ள போக்குவரத்துச் சட்டம்  இதைவாசித்துக் கொண்டிருக்கும் எமக்கு நிச்சயம் சந்தோசத்தை தரும். இன்றுமுதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்காக சில சட்டங்கள்  கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களை கருத்திற்கொண்டே  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம்  முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 254 பேர் உயிரிழந்ததுடன் இந்த வருடம் அந்த எண்ணிக்கை 352 ஆக அதிகரித்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இப்புதிய சட்டத்தை பொலிஸார் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment