முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி,
அவரது மரணத்தின் போது அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், ரத்தம் தோய்ந்த புல், ரங்கூனில் இருந்த ராகவன் என்பவருக்கு காந்தி எழுதிய கடிதம் உட்பட அவரது பல்வேறு கடிதங்கள், குஜராத்தி மொழியில் உள்ள பிரார்த்தனை புத்தகம் ஆகியவை ஏலத்தில் விடப்பட உள்ளன.
மகாத்மா காந்தி சுடப்பட்டு விழுந்த இடத்தின் மண், மற்றும் இரத்தம் தோய்ந்த புல் என்பனவற்றை நம்பியார் என்பவர் சேகரித்து நகைப்பெட்டி ஒன்றில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
மகாத்மா காந்தியின் பொருட்களுக்கு ஆரம்ப விலையாக 10,000 முதல் 15,000 பிரிட்டன் பவுண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதிகமான ஆரம்ப விலை. காந்தியின் பொருட்கள் சுமார் ஒரு லட்சம் பவுண்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாக முல்லாக் நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment