18 Apr 2012

6 கால்களோடு பிறந்துள்ள அபூர்வப் பிள்ளை !

6 கால்கள் மற்றும் கைகள் என சுமார் 8 மூட்டுக்களோடு பாக்கிஸ்தானில் ஒரு அபூர்வப் பிள்ளை பிறந்துள்ளது. பாக்கிஸ்தான் தலைநகர் கராச்சியில் இருந்து 240 மைல் தொலைவில் அமைந்துள்ள சுகூர் என்னும் கிராமத்திலேயே


இக் குழந்தை பிறந்துள்ளது. இச் சிறுவனின் தந்தை இம்ரான் ஷகீக் எஸ்-ரே நிலையத்தில் வேலைபார்க்கிறார். உடலுறவின்போது ஆண் குறியில் இருந்து வெளிப்படும் விந்தில், காணப்படும் பல லட்சம் விந்தணுக்கள், பெண்ணின் பிறப்பு உறுப்பூடாக நீந்திச் செல்கிறது. நீந்தும் இப்போராட்டத்தில் பல லட்சம் அணுக்கள் இறந்துவிடுகின்றன. இறுதியாக சில ஆயிரம் விந்தணுக்களே கருப்பையைச் சென்றடைகின்றன. அங்கே இருக்கும் கரு முட்டையையின் சுவர் தடிப்பாக இருக்கும் ! கருவறை மட்டும் நீந்திச் சென்றது போதாது என்று கரு முட்டையின் சுவரையும் துளைத்துக்கொண்டு எந்த விந்தணு முதலில் செல்கிறதோ அதுவே கருக்கட்டி பிள்ளையாகப் பிறக்கிறது.





இங்கே மனிதர்களால் விளங்கிக்கொள்ள முடியாத பல நிகழ்வுகள் நடைபெறுகிறது. உதாரணமாக ஒரு விந்தது வெற்றிகரமாக கருமுட்டையின் சுவரை ஊடறுத்து உள்ளே சென்றுவிட்டால் போதும். மறு வினாடியே கருமுட்டையின் சுவர் மேலும் தடித்து இறுகிவிடும். இச் செயலானது, மற்றுமொரு விந்தணு உள்ளே செல்வதைத் தடுத்துவிடுகிறது. சிலவேளைகளில் கரு முட்டையின் சுவர் தடிப்பாக சற்று தாமதம் ஆனாலும், வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு விந்தணு ஊடறுத்து உள்ளே சென்றுவிடும். அப்படி என்றால் இரட்டைக்குழந்தை உருவாகும். ஆனால் இங்கே நீங்கள் பார்ப்பது, ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் அல்ல !

இது குரோமசோம்களின் குறைபாட்டால் உருவாகியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1 கோடியில் 1 கருத்தரிப்பே இவ்வாறான குறைபாடோடு இருக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒரு ஆண் மகன் அல்லது பெண்ணை எடுத்துக்கொண்டால், அவர்கள் டி.என்.ஏ அல்லது குரோமசோம்களைப் பாதிப்பது கதிரியக்கங்களே ஆகும். மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஒரு விடையத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். இவ்வாறு 6 கால்களோடு பிறந்துள்ள அபூர்வக் குழந்தையின் தகப்பன் எக்ஸ்-ரே நிலையத்தில் வேலைசெய்கிறார் என்று. அவர் பாதுகாப்பாக ஒரு இடத்தில் நின்று வேலைசெய்யாவிட்டால், அவரை எக்ஸ்-ரே கதிர்கள் தாக்கும் அபாயம் உண்டு. இதனால் அவர் டி.என்.ஏ மற்றும் குரோமசோம்களில் மாற்றங்கள் உருவாகும்.

குறிப்பிட்ட நபருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கே இவ்வாறு நிகழு சாத்தியக்கூறு உண்டு. தற்போது 6 கால்களுடன் பிறந்திருக்கும் இச் சிறுவனுக்கு பல சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல இந்தியாவில் 2005ம் ஆண்டு லக்ஷ்மி டட்மா என்னும் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் இந்திய மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவைசிகிச்சை மூலம் அவர் குணமடைந்தார்(அப் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

No comments:

Post a Comment