15 May 2016

தமிழக உறவுகளிடம் உரிமையுடன் ஒரு வேண்டுகோள்!


தமிழக உறவுகளிடம் உரிமையுடன் ஒரு வேண்டுகோள்!

வணக்கம் உறவுகளே.......

இதுவரை எம்மை பகடைக்காய்களாய் பயன்படுத்திவந்த பலருக்கு தகுந்த பாடத்தினை புகட்ட வேண்டிய ஒரு முக்கியமான
சந்தர்ப்பமாக  நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலை  நாம் பயன்படுத்திக்ககொள்ள வேண்டும்.

 தமிழக தமிழர்கள் என்றாலும் சரி, ஈழத்  தமிழர்கள் என்றாலும் சரி ,உலகத்தில் எந்த நாட்டில் வாழும் தமிழர்களும்  நாடு, தேசம் என்ற வரம்பிற்கு அப்பால் நாம் எல்லோரும் தமிழர்கள் எனும் உணர்வோடும். உரிமையோடும் உறவாடக்கூடிய இந்த உலக்கத்தில் வாழும் இனங்களில் நாம் முதலிடம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

 நாம் எங்கு இருந்தாலும் தமிழ் பற்றும், உணர்வும் எமது இரத்தத்துடன் கலந்திருக்கும்.  அந்த அடிப்படையில் தமிழக உறவுகளிடம் நான் உரிமையுடன் சில விடயங்களை எனது சமூகவலைத்தளமூடாக பரிர்ந்து கொள்கிறேன்.

உலகத்தின்  மூத்தகுடியும், தொன்மைமிக்க வரலாறும், உலகத்தின் படைப்போடு ஒன்றித்த பண்பாட்டையும் கொண்ட பெருமைக்குரிய தமிழர்களாகிய நாம்  இதற்கெல்லாம் ஊற்றான  தமிழகத்தில்  நாளை மறுதினம்  நடைபெறவுள்ள தேர்தலை சரியாக பயன்படுத்திக்ககொள்ள வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். இன்னும் நாம் ஏமாறகூடாது.


இத்தனை பெருமைக்குரிய நமது தமிழகத்தின்  பெரும்பான்மையான கிராமங்களில் எம்மக்களை இன்னும் விழிப்பில்லாமல் செய்து  பல அரசியல்வாதிகள் பல்வேறு கூறுகளாக எம்மக்களை  பிரித்து அதில் குளிர்காய்ந்த வரலாறே தொடர்ந்தன.


  இந்த நவீன காலத்தில் எமது மக்களின் சில செயற்பாடுகளையும் எமது விழிப்பற்ற நிலையையும் எண்ணி   வேதனைப்பட்டு விமா்சனம் செய்யும் அளவுக்கு தமிழகத்தின்  சில அரசியல்லாதிகள் திடடமிட்டு காய்நகர்தி அதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளார்கள். இது மறுக்கமுடியாத உண்மையுமாகும்.இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது.

 இனியும் தொடராது என்று நம்பும் அளவுக்கு இந்த தேர்தல் ஆரம்பித்த குருகிய காலத்தில் பல விடயங்களை அவதானிக்கின்றபோது கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றது. இந்த மாற்றம் இந்ந விழிப்புணர்வு செயல்வடிவம் பெறவேண்டும்.


தமிழக மக்கள் மத்தியில்  இந்த தேர்தல் விடயத்தில் முன்னரைவிடவும் ஒரு தெளிவு  ஏற்பட்டுள்ளது. பொதுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணக்கூடியதாக உள்ளன.  இந்ந விழிப்பு நிரந்தர நல்ல மாற்றமாக அமைய கட்டாயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலை சரியாக பயன்படுத்த வேண்டும்.

கலைஞர்களை கௌரவிக்கவேண்டும் இதை மறுக்கவில்லை  சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் அதில் வரும் நல்ல கருத்துக்களை உள்வாங்கலாம், நடிகர்களின் நடிப்பு திறமையை பாராட்டலாம். அதற்காக சினிமாவில் நடிப்பவர்கள் எல்லோரும் நிஐத்தில் தலைவராகவும் முடியாது அவர்கள் எமக்கு ஹீறோவாகவும் முடியாது.

 இக்கருத்து எல்லோருக்கும் பொருந்தாது  உதாரணமாக மக்கள் திலகம் நிஐயத்திலும் இனப்பற்றுடன்  வாழ்ந்து காட்டினார் அதனால் இன்றும் மனதில் இருக்கிறார் அதற்காக நடிகர்கள் எல்லோரும் எமக்கு நியத்தில் ஹீறோ இல்லை அவர்கள் சீறோ என்பதற்கு உதாரணமாக பலரைக்கூறமுடியும்.


 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்  பெயரை வைத்து  சில அரசியலுக்கு வந்தாா்கள்   ஊழல் செய்தாா்கய்   எம்மை சுரண்டி வாழ்கிறாா்கள் . ஆனால்   மக்கள் திலகத்தின்  பாடல்களை ஒலிபரப்பினால் எவன் வந்தாலும் தமிழக மக்கள் வாக்கு போடுவார்கள் என்ற  நம்பிக்கையுடன் எம்மை இவர்கள் இன்னும் முட்டாள்களாக நினைத்துச் செயற்பட இனியும்  நாம் இடம் கொடுக்ககூடாது.

குளீரூட்டிய வாகனத்தில் செல்ல அந்த தரையில் விழுந்து வணங்கும் அளவுக்கு சில முட்டாள் தமிழர்கள் இருப்பதால்தான் தன்மானம்மிக்க தமிழக மக்களுக்கு மட்டுமல்ல எல்லா தமிழருக்குமே ஒரு தலைகுனிவாக உள்ளது.

இவ்வாறான  செயல்களையும் இப்படிப்பட்டவர்களையும்  ஓரம்கட்ட வேண்டியது  எமது கடமையாகும்.  இனியும் நாம் விழிப்பில்லாமல் செயற்படலாமா உறவுகளே.


தமிழர்களுக்கெல்லாம் நான்தான் தலைவன் என்று தன்னை காட்டிக்கொண்டு உள்ளுக்குள் தமிழனுக்கு என்ன நடந்தால் என்ன தனக்கும், தனது குடும்பத்திற்கும் மட்டும் நல்லது நடந்தால் போதும் என்ற சுயநலவாதிகள் கொடுக்கும் இலவசங்கள்,  சேலை, தொலைபேசி, மதுபானம்; பணம் இவற்றை கொடுத்து தமிழக மக்களை மடக்கலாம் அவர்கள்  வாக்கு போடுவார்கள் என்ற இவர்களின் எண்ணங்களுக்கும் எம்மை முட்டாளாக்கும் வேலைகளுக்கும் திங்கட்கிழமை நீங்கள் நல்ல பாடம் புகட்டூவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.


சினிமாவில் சுழண்டு சுழண்டு சண்டைபோட்டு தத்துவ வசனம் பேசினால் நிஐயத்தில் நீங்கள் பக்குவபட்ட தலைவர் என்று ஆகிவிடாது அது நிஐயத்தில் வாழ்ந்து காட்டும்போதுதான் உண்மை. நாலுபேர் கேலிசெய்யக்கூடிய நிலையில் இருக்கும் இவர்களை  எல்லாம் தமிழருக்கு தலைவராக்கலாமா?


நீண்ட வரலாறும், உலகத்தின் மூத்தகுடியும் ,உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல அறிவாளிகள், மாவீரர்கள்,  தியாகிகள், புலவர்கள் கல்விமான்கள், பண்டிதர்கள் என பலர் வாழந்த எம் தமிழகத்தில் நாம் இன்னும் இவர்களுக்கு பகடைக்காய்களாய் இருப்பதும், இவர்கள் எம்மை ஏமாற்றலாம் என்று எண்ணுமளவுக்கு இன்னும் ஏமாறுவது எம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமே.

இனியும் தூங்க வேண்டாம் விழிப்புடன் செயற்பட்டு இந்த தேர்தலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்  என்று கேட்டுக்கொள்கின்றேன்.

                                                                                                                      கேதீஸ்


                                                                         -நன்றி-

No comments:

Post a Comment