9 Apr 2015

திறமை மட்டுமா? பணமும் வேண்டும்!





இயந்திர மயப்படுத்தப்பட்ட யுகம் ஒவ்வொருவரும் இளைப்பாறுவதற்கு நேரம் ஒதுக்கவேண்டியதைவிட உழைப்பதற்கு அதிக நேரத்தை
  பயன்படுத்தியேயாக வேண்டும் என்ற கட்டாய காலத்தில் வாழ்கின்றோம்.


 நாளுக்கு நாள் தேவைகள் அதிகரித்துக்கொண்டு இருக்கும் காலம் இது, உலகம் மிகவும் வேகமாக சுற்றுகிறது. நாங்கள் உலகம் ஓடும் வேகத்துடன் ஓடியே ஆக வேண்டும் சற்று ஓய்வெடுத்தாலும் உலம் எங்களை விட்டு எங்கேயோ சென்று விடும்.


உலகமாற்றத்தை, நவீனத்தை, கல்வியை, அனுபவத்தை,  நற்பண்புகளை கற்கும் அதேவேளை  எதையும் தீா்மானிக்கும் சக்தியாகவுள்ள பணத்தையும் சம்பாதித்து உலகத்தை முந்திச் செல்லாவிட்டாலும்  உலகத்துடன் அந்த வேகத்துடன் ஓட  வேண்டியுள்ளது.


எதையும் தீா்மானிக்கும் சக்தியாக பணமே  இன்று முன்னிலையாய் உள்ளது 
உன்னிடம் பணம் இல்லை என்றால் இந்த உலகம் உன்னை ஒரு குறையுள்ளவனாக பார்க்கிறது.


பணத்தைவிட குணம்தான் முக்கியம் என்போர் பலர் உள்ளார்கள். அதை மறுப்பதற்கு இல்லை. அதுதான் உண்மையும் கூட இதை நானும் சொல்கிறேன் இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும் சொல்லுவீர்கள்.


 நீங்கள்  எவ்வளவு நல்லவனாக இருந்தாலும்,  எவ்வளவு திறமை உள்ளவனாக இருந்தாலும் உங்களிடம் பணம் இல்லை என்றால்  நாம் எமது திறமைகளை வளா்க்கவோ  அதை நல் வழிகளில்  பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறவோ அதற்கும் பணம்தான் தேவையாக இருக்கிறது



இதனால் எமது திறமைகளை, ஆற்றல்களை முடக்கி வைத்துவிட்டு பணத்தை நேர் வழிகளில் உழைக்கும் வழிகளை முதலில் தேடிச்செல்லவெண்டியுள்ளது.


இதற்காக உறவுகளை விட்டு தாய் மண்ணைவிட்டு  பற்றையும் பாசங்களையும் மனதில் சுமந்தபடி பணத்திற்கு உலகம் கொடுத்த முக்கியத்துவத்தால் அதை பெறவேண்டும் என்ற வைராக்கியத்துடன் நாம் எத்தனை பேர் இன்று கடல் கடந்து செல்கிறோம்  கஷ்டப்பட்டு உழைக்கின்றோம்.


எனவே நண்பா்களே இத்தனை தியாகங்களுக்கு மத்தியில் நாட்டைவிட்டு உறவுகளை விட்டு சென்று குடும்பத்திற்காக உலகின் எங்கோவெல்லாம் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்,  காலத்தை வீண்விரயம் செய்யாது    எமது இலட்சியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படவேண்டும்.



குறிப்பு - உங்கள் அனுபவங்கள் கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

                                     -நன்றி-

No comments:

Post a Comment