பணமா? குணமா? பணமும் குணமுமா?
பணத்தைவிட குணம்தான் முக்கியம் என்போர் பலர் உள்ளார்கள். அதை மறுப்பதற்கு இல்லை. அதுதான் உண்மையும் கூட இதை நானும் சொல்கிறேன் இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும் சொல்லுவீர்கள்.
ஆனால் அதன்படி நாம் ஒவ்வொருவரும் உள்ளார்ந்தமாக செயற்படுகின்றோமா ? நம் உள்ளத்தை தொட்டுக்கேளுங்கள். இன்று இந்த உலகில் பணத்தால் எத்தனை எத்தனை விபரிதங்கள் இடம்பெறுகின்றன.
இன்பம் துன்பம் என அனைத்துமே பணத்தை மையமாகக் கொண்டுதான் நிகழ்கிறது. இது ஏன் இது இவ்வாறு ?
நாம் ஒவ்வொருவரும் குணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இன்று குணம் என்ற மூன்றெழுத்தைவிட பணம் என்ற மூன்றெழுத்தே எதையும் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்கு செலுத்துகிறது.
விரும்பியோ விரும்பாமலோ பணமும் அதன் தேவையும் இன்றைய உலக நடமுறையில் இன்றியமையாததாய் முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. அப்படி என்றால் பணத்தை விட குணம் முக்கியமில்லையா என்று நீங்கள் யோசிக்கலாம்…
நாங்கள் பணத்தைவிட குணத்தை மேலானதாய் ஏற்று கொள்ளும் அதே வேளை நல்ல குணத்தோடு சேர்த்து பணத்தையும் கட்டாயம் சம்பாதிக்கவேண்டிய காலத்தில் நாங்கள் வாழந்துகொண்டிருக்கின்றோம்.
ஆகவே குணத்துக்கு முதலிடம் கொடுப்பதோடு நாங்கள் பணத்தையும் நல்ல வழியில் சம்பாதிக்கவேண்டிய தேவையும் நாம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக…
ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அவனிடம் பணம் இல்லை என்றால் இன்றைய வித்தியாசமான சமூகம் அவனிடம் பணம் இல்லை என்பதை ஒரு குறையாக பார்ப்பதையே நாங்கள் அவதானிக்கின்றோம்.
அதே வேளை ஒருவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவனிடம் பணம் இருந்தால் இந்த சமூகத்துக்கு அவனின் இருக்கும் கெட்ட குணங்கள் பெரிதாக தெரியாது இது தான் இன்றை உலகமும் அழிவுகள் நிறைந்த காலமுமாக உள்ளது.
ஆகவே இந்தக்காலத்தில் வாழும் நாங்கள் நல்ல குணத்தை நல்ல எண்ணங்களை எங்களுள் வளர்பபதுடன் நல் வழியில் பணத்தையும் சம்பாதித்து அப்பணத்தைக்கொண்டு நல்லதை செய்து வாழவேண்டியுள்ளது.

“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை..” என்பதன் உள்ளோட்டமான அர்த்தமே உங்கள் கட்டுரையின் சாரம்தான். குணம் இல்லாத பணமோ அல்லது பணம் இல்லாத குணமோ, இரண்டுமே குப்பையில்தான். இல்வாழ்வு என்று வரும்போது, குணமற்ற பணத்திலும் பணமற்ற குணத்திலும் நின்மதி இருக்காது.
ReplyDelete