30 Sept 2012

பாண்டிருப்பின் சொத்தை இழந்து ஒரு மாதமாகிறது!


பாண்டிருப்பின் சொத்தை இழந்து  ஒரு மாதமாகிறது!
பாண்டிருப்பின் பண்பாளன், பற்றாளன், கலைஞன் எங்களின் சொத்து நாங்கள் அன்புடன்; அழைக்கும் தீபன் அண்ணாவை இழந்து ஒரு மாதமாகிறது…
எம்மை விட்டு இள வயதில் எட்டாத்தூரம் பிரிந்து சென்றுள்ள தீபன் அண்ணாவின் இழப்பு உண்மையில் பாண்டிருப்புக்கு ஒரு பேரிழப்பு என்றே சொல்லாம்.

பிறந்த மண்ணுக்கு பெருமை தேடித்தந்த சிறந்த சிற்பக்கலைஞன் பள்ளிப்பருவம் இருந்தே தன் திறமையை சுயமாக வளர்த்துக்கொண்ட தீபன் அண்ணாவினால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல பாண்டிய+ரிலும் வெளியூர்;களிலும் இன்று அவரை ஞாபகப்படுத்தியவாறே உள்ளன.
ஆண்மீகத்திலும,; தன் சமயத்திலும் பற்றுக்கொண்ட இவர் படித்த கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலேயே தொழிலும் பெற்றார்.
படித்த பாடசாலையில் மட்டுமல்ல பிறந்த மண்ணிலும் அனைவரோடும் பண்பாக பழகும் இவரை அவரின் சகோதரர்களுடன் நாங்களும் தீபன் அண்ணா என அன்பாய் அழைப்போம.; இன்றும் அந்நாமம் காதுகலில் கேட்கிறது. அவரின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத பலரின் உள்ளங்கள் இது கனவா என எண்ணியபடி புலம்புவதையும் உணரமுடிகிறது.
மழழைப் பருவம் , பள்ளிப்பருவம் இன்றும் அண்ணா தம்பியாக அன்பாய் பழகிய தீபன் அண்ணா, பாடசாலை வாழ்க்கையின் பின்னர் ஒரு காலப்பகுதியில் நாங்கள் சமூகப்பணியில் அதிகமாக ஈடுபட்டபோது எங்களை பல வழிகளில் மூத்தவராய் இருந்து தோழ்கொடுத்து உற்சாகப்படுத்திய சமூக சேவையாளன். தன்னை பெரிதும் விளம்பரம் செய்யாத தன்னடக்கம் கொண்ட எளிமையானவர்.
பல் திறமை கொண்ட தீபன் அண்ணாவின் கனிரென்ற குரலில் பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவ காலத்தில கேட்கும்; மாரியம்மன் தாலாட்டு இனி எங்கள் ஊரில் எப்போது ஒலிக்கும்.
இவ்வாறு தீபன் அண்ணாவை அவரின் பண்பை அன்பை தன்னகத்தே கொண்டுள்ள பல திறமைகளை இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம்.
குடும்பத்தின் மூத்தவரான தீபன் அண்ணாவின் இழப்பு அவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல எங்கள் ஊருக்கே பேரிழப்பாகும்.
இனி இப்படியொரு மனிதனை எங்கு காண்போம்? இறைவன் நல்லவர்களை விரைவில் அவர் அருகில் அழைத்து விடுவார் என்பார்கள் அது உண்மைதான்.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பு.கேதீஸ்

தருவாகி தளிர்ப்பாய் தீபா!

நீசெய்த சிலையெல்லாம்
உயிர்பெற்று கண்ணீரை
உதிர்க்கின்ற நேரமல்லோ!
நீகொண்ட நட்பெல்லாம்
சிலையாகி மலைத்திங்கு
கதியற்றுக் கரையுமல்லோ!
மாயாது ஒருநாளும்
மானுடன் நிலையாக
வதிகின்ற கதையில்லைத்தான்!
காயாகி கனியாகி
வீழாது விதையானாய்
தருவாகி தளிர்ப்பாய் தீபா!






No comments:

Post a Comment