பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு நேற்று! வருடாந்த உற்சவம் இன்றுடன் இனிதே நிறைவுபெற்றது! (xspg;gjpT ,izg;G)
கிழக்கிலங்கையின் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பாண்டிருப்பு திரௌபதை
அம்மன் ஆலய வருடாந்த
உற்சவத்தின் முக்கிய நிகழ்வான
பக்திப்பரவமூட்டும் தீ மிதிப்ப நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
மகாபாரத
இதிகாசத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இவ்வாலய
உற்சவம் கடந்த 11 ஆம் திகதி திருக்கதவு
திறத்தல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய 18 நாட்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
ஆலயத்தின் முக்கிய திருவிழாக்களான சுவாமி எழுந்தருளப் பண்ணல்
, நாட்கால் வெட்டுதல். கலியாணக் கால்வெட்டுதல். பாண்டவர்கள் சகிதம் திரௌபதை வனவாசம்
செல்லல். அருச்சுனன்
தவ நிலை செல்லல். இடம் பெற்றதுடன் நேற்று வெள்ளிக்கிழமை
மாலை பக்திப்பரவசமூட்டும் தீ
மிதிப்பு வைபவம் இடம்பெற்றதுடன் ( இலங்கையில்
இருக்கும் ஆலய தீக்குழிகளில் இதுவே
நீளமானது 18 அடி). இன்று
தீக்
குழிக்கு பால்
வார்த்தல் மற்றும்
தருமருக்கு முடி சூடுதல் சடங்குடன் உற்சவம் இனிதே நிறைவு
பெற்றது.
உற்சவ காலத்தில் பாண்டிருப்பு
உட்பட இப் பிரதேசமே மிகவும் கோலாகலமாக இருந்தது. பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
நேற்று இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வின் ஒளிப்பதிவு



.jpg)






No comments:
Post a Comment