10 Sept 2012

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது!



பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய  வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது.


கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்
கடந்த   11 ஆம் திகதி  திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியது.


மகாபாரத இதிகாசத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இவ்வாலய உற்சவம் 18 நாட்கள் இடம்பெற்று எதிர்வரும் 29 ஆம் திகதி நிறைவு பெறும்.

 ஆலயத்தின் முக்கிய திருவிழாக்கள் ஏழாவது தினமான  17 ஆம் திகதி இன்று சுவாமி எழுந்தருளப் பண்ணலுடன் ஆரம்பிக்கும் இ 18 ஆம் திகதி நாட்கால் வெட்டுதல். 22 ஆம் திகதி கலியாணக் கால்வெட்டுதல். 26 ஆம் திகதி பாண்டவர்கள் சகிதம் திரௌபதை வனவாசம் செல்லல். 27 ஆம் திகதி அருச்சுனன் தவ நிலை செல்லல். 28 ஆம் திகதி   வெள்ளிக்கிழமை மாலை பக்திப்பரவசமூட்டும்  தீ மிதிப்பு வைபவம் இடம்பெறும். இலங்கையில் இருக்கும் ஆலய தீக்குழிகளில் இதுவே நீளமானது ( 18 அடி).  மறுநாள் தீக் குழிக்கு  பால் வார்த்தல்  மற்றும் தருமருக்கு முடி சூடுதல்  சடங்குடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

இவ் உற்சவ காலத்தில் சைவமும் தழிழும் தளைத்தோங்கும் பாண்டியூர்  மண் மிகவும் கோலாகலமாக இருக்கும் அத்தோடு  உற்சவ காலத்தில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.



கடந்த ஆண்டின் உற்சவ ஒளிப்பதிவு -2011

1 comment:

  1. அம்மா உனை எப்போது தரிசிப்பேன்.....

    ReplyDelete