26 Jun 2014

இயற்கை உரத்தில் எரிவாயு!

இயற்கை உரத்தில்        எரிவாயு!

குடிசை வீட்டில் எரியும் குப்பி விளக்கு முதல்  விண்ணில் பறக்கும் விமானம்வரை
எல்லாமே எரிபொருளின் அடிப்படையிலேயே இயங்குகின்றது.

சொல்லப்போனால் உலகத்தின் இயக்கம் சூரியனுக்கு அடுத்ததாக எரிபொருளிலேயே தங்கியுள்ளது. உலக சனத்தொகை மனிதனின்  தேவைகள்  என எல்லாம் அதிகரித்ததால் எமது வளங்கள் நாளுக்கு நாள் அருகிக்கொண்டே செல்கிறது.

எதிர்காலத்தில் பதீலீட்டு பயன்பாடுகளை கண்டுபிடித்து செயற்படுத்த வேண்டிய பொறுப்பும் ,எதிர்கால கவலையும் வளந்த ,வளர்முக நாடுகள் என ஒட்டு மொத்த உலக மக்களின் கவலையாகவுமுள்ளது.

 விஞ்ஞானத்தின் அடிப்படையே  தமிழர்களின் மெய்ஞானம்தான் . அதுபோன்றே தமிழர்கள் பின்பற்றிய  பல்வேறு பாரம்பரிய முறைகளை நாங்கள் மறந்து விட்டாலும் உலகம் பின்பற்றுகிறது.

வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு  பாரம்பரிய முறைகளில் இந்த இயற்கை சமையல் எரிவாயு முறையும் ஒன்றாகும்.

சாணத்தைக்கொண்டு சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் முறை ஒன்று அறிமுகத்திலுள்ளது.  எம்  முன்னோர்களின்  பக்கவிளைவற்ற  பாரம்பரிய முறையாகும்.

   இப்பயன்பாட்டுக்கான முறைகள் நவீன முறையில் தனியார் நிறுவனங்களால்  புது வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இயற்கை உரத்தைக்கொண்டு  குறைந்த செலவில் சமையல் எரிவாயு தயாரிக்கும் இம்முறை இன்றைய எரிபொருள்  விலை அதிகமாக உள்ள காலத்தில்  பெரிய வரப்பிரசாதமே.

தமிழகத்தில் அறிமுகத்தில் உள்ள  இதனை எத்தனை பேர் பயன்படுத்துகின்றோம்? இதற்கு  எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கின்றோம்? ''இம்முறையை பயன்படுத்துவதால் பணம் சேமிக்கப்படுவதுடன் பக்கவிளைவுகளும் இல்லாமல் உள்ளது'' என்று இதனால் பயன் படுவோர் உளம்மகிழ கூறுகின்றனர்.



இது ஒரு இரட்டை பயனுள்ள சூழல் மாசுபடாத நன்மைகள்  தரும் முறையாகும். இவ்வாறே எத்தனை எத்தனை  பாரம்பரிய இயற்கையான விவசாய வாழ்வாதார முறைகள் உள்ளன.

 இவ்வாறான எமது பாரம்பரிய  முறைகளை மறந்து நவீனத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதால் இன்று  இந்த உலகம் பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றது.

நாம் வாழும் இந்த நவீன யுகம்  இயற்கையை மறந்த ஒரு  செயற்கையான யுகமாக காணப்படுகிறது.


இதன் தாக்கம் யாரை பார்த்தாலும்   ஏதோ  ஒரு சின்ன நோயுடனாவது வயதாகும்  முன்னமே மாத்திரை பைகளுடன் அலையும் நிலையை உருவாக்கியுள்ளது.

இரசாயன மயமான விவசாயிகளாக நாம் மாறியதே இதற்கெல்லாம் காரணம்.  அதனால் இன்று உணவுடன் சேர்த்து நஞ்சையும் உண்ணுகிறோம்.

ஆனால் இந்த செயற்கை,இரசாயன விவசாயம்,நவீன சூழல்  இவற்றுக்கு  மாறாக  ஆரோக்கியத்துடன் வாழ்ந்த எமது முன்னையோர்  பின்பற்றிய  இயற்கையை, விவசாய பாரம்பரிய வாழ்க்கையை  எம்மில் எத்தனை பேர் பின்பற்றுகின்றோம்.

இவ்வாறான தூர நோக்கிலான திட்டங்கள் யுத்தத்தின் முன்னர் வன்னியில் இருந்ததாக அறிந்துள்ளேன்.



எங்கள் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இந்த உலகத்தின் சொத்து.அவர்  சொன்ன கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றினாலே போதும்.


3 comments:

  1. இலங்கையில் இவ்வாறான திட்டங்களை ஊக்குவிக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். நன்றி கேதீஸ் உங்கள் தகவல்களுக்கு...

    ReplyDelete
  2. நிகழ்காலத்தில் உலகுக்கு நிகழ்ந்துள்ள பேராபத்தின் உக்கிரத்தை புலப்படுத்த, கட்டுரையாளார் பயன்படுத்தியுள்ள வார்த்தைப்பிரயோகங்களான,
    “வயதாகும் முன்னமே மாத்திரை பைகளுடன் அலையும் நிலையை உருவாக்கியுள்ளது....” “இன்று உணவுடன் சேர்த்து நஞ்சையும் உண்ணுகிறோம்....”
    போன்ற யுக்திகள் சிறப்பாக உள்ளன.

    ReplyDelete