வணக்கம் நண்பர்களே!
இந்த சமூக வலையமைப்பினூடாக உங்களுடன் சில விடயங்களை மீட்டிப்பார்க்க ஆசைப்படுகிறேன்...
உலகம் மிகவும் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது இந்த உலக மாற்றத்தால் நாகரீக மாற்றங்களும் அதனால் மனித தேவைகளும் நாளுக்கு நாள்
அதிகரிக்கிறது. அந்த உலக மாற்றத்துக்கு ஏற்ப நாம் வேகமாக செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயந்திர மயப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதை மீட்டிப்பார்க்கின்ற போது மனதுக்கு இனிமையாக இருந்தாலும் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எமது கிராமத்தில் நண்பர்களுடன் உறவகளுடன் அயல்வீட்டாருடன் அன்பாக பழகிய பசுமையான காலம் நெருக்கம் இன்று காணவில்லை என்பதை நினைக்கும் போது கவலையாகவும் இருக்கிறது.
அந்த பசுமையான காலத்தில் அமது கிராமத்தில் எனக்கு பிடித்ததை கூறுகிறேன் ...
சாதாரணமாக வீட்டில் சமைக்கும் கறிகளில் ஒரு கறியையாவது சிறு பாத்திரத்தில் அயலில் இருக்கும் வீட்டாருக்கு அவர்கள் நெருங்கிய உறவக்காரராக இல்லாவிட்டாலும் கொடுப்பார்கள் அவர்கள் அந்த கறியை எடுத்துவிட்டு அவர்கள் சமைத்த கறியை கொடுத்து பரிமாறிக்கொள்வார்கள். இப்படியாக அயல்வீடுகளுக்கிடையில் மிகவும் நெருங்கிய உறவு பாசம் காணப்பட்டது அன்று. இதை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இவற்றை இப்போது எந்த இடத்திலும் காணமுடியவில்லை. ஏன் அயல்வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றெ தெரியாமல் பல வீடுகள் உள்ளன.
இவ்வாறு எமது கிராம வாழ்க்கையில் மறைந்திருக்கும் நல்ல பல நினைவுகளையும் நீங்கள் இதில் மீட்டுங்ககள். கலந்து பேசுவோம் இன்னும் பலவற்றை..... அன்புடன் -கேதீஸ்-
-நன்றி-
.jpg)
No comments:
Post a Comment