9 Aug 2012

தமிழ் மொழி பேசும் சீனப் பெண்மணி!


உலகின் மூத்தமொழிகளில் ஒன்றான தமிழ் மொழி எங்கள் தாய்மொழி என்று பேசி பெருமைப்பட்டுக்கொள்வதோடு மட்டும்  நாங்கள் நின்று விடாமல் அதன் பெருமையை  தொடாந்து பாதுகாக்கவும்
  எமது மொழியின் வளாச்சிக்காகவும்  அது அழிவடையாமல் இருக்கவும் எங்களால் இயன்ற பல பங்களிப்புக்களை நாங்கள் செய்ய வேண்டும்.   இன்று    தமிழ் தெரியாக தமிழர்கள் பலரைப்  எம் மத்தியில் பார்க்கின்றோம். உதாரணமாக ஒரு பொருளுக்கு  தமிழ் கருத்து தெரியாமல் இருக்கும் ஆனால் அதனை  ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.  இதுதான்  தமிழ்  பெயர் என்று எண்ணுபவர்களும் இருக்கின்றார்கள்;.   அதே நேரம் இப்படியும் சிலர் இருக்கின்றார்கள் எனது மகன் தமிழைவிடவும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார் என்று மார்தட்டிக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது என்பது வரவேற்கக்கூடிய விடயம் ஆனால் ஒருவரிடம் எவ்வளவு திறமை இருந்தும் அவர் தாய் மொழி தெரியாதவராக   தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காதவராக இருந்தால்  அவரிடம் இருக்கும் எதற்கும் எந்த திறமைக்கும் நிச்சயம் பெறுமதி இருக்காது. அதற்கு பயனும் இருக்காது. 
              
இப்படியானவர்கள் மத்தியில் நான்  தமிழ் மொழி பேசும்  இந்த சீனப் பெண்மணி தொடர்பான விடயங்களை உங்களுக்கு தருகிறேன்.

இவர் சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் . பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். எப்படி  தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள்.


 அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே இலட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைகாட்சிகள் .வானொலிகள் ஆரம்பிக்க பட்டுள்ளது இதில் முழுவதும்  சீனர்கள் மட்டமே பணி புரிகிறார்கள்.
ஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.  அதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைகாட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம். அதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னதிரை சினிமா பாடல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து ரசிக்கிறார்களோ அதேபோல் தற்போது சீனாவிலும் தமிழின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்.  வாழ்க தமிழ்மொழி…

No comments:

Post a Comment