26 Mar 2012

போலாந்து மொழியில் பகவத்கீதை

பகவத்கீதை போலந்து மொழியில் தயாராகிறது. சமஸ்கிருத வார்த்தைகள் அச்சுபிறழாமல் அப்படியே மொழி பெயர்க்கப்படுவதே மொழி மாற்றத்தி்ன் சிறப்பம்சமாகும்.


இதற்கான முயற்சியை ‌மேற்கொண்டுள்ளார் போலந்து நாட்டை சேர்ந்த அன்னாரசின்ஸ்கா. இவர் வாரணாசியில் கடந்த 10 ஆண்டுகளுக்‌கும் ‌மேலாக தங்கியிருந்து சமஸ்கிருத மொழியில் பி.எச்.டி ., பட்டம் பெற்றுள்ள இவருக்கு வயது 60.

 நான்கு குழந்தைகளுக்கு தாயான இவர் தனது கணவரையும் குழந்தைகளையும் சமஸ்கிருத மொழியில் ஆர்வத்தை உருவாக்கினார். தற்போது அவர்கள் வீட்டில் சமஸ்கிருத மொழி சரளமாக பேசப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாது இவரது சகோதரரும் தன்னுடைய பெயரை யோகானந்த் என்று பெயரை மாற்றி வாரணாசியில் வசித்து வருகிறார்.

மற்றொரு மகனான பிலிப் என்பவர் இந்தியாவிற்கு 12-க்கும் மேற்பட்ட முறை வந்து சென்றுள்ளார். அன்னா ரசின்ஸ்காவின் சேவை வெறும் வார்‌த்தைகளால் பாராட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்தியா போலந்து கலாச்சாரத்துறை தலைவர் ஜானுஸ்கிரிஸ்‌ஜோவ்ஸ்‌கி. ‌மேலும் சுயநலமில்லாத இவரது சேவையால் வளரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த புத்தகம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக போலந்தில் உள்ள இந்திய தூதர் மோனிகா கபிலா மோஹதா தெரிவித்துள்ளார்.

வாழ்க்க‌ை தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்கீதை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment